முகம் பொலிவுடன் இருக்க உதவும் வெல்லம்: சில எளிய Facepack ஐடியா!
சரும பராமரிப்பில் வெல்லம் அதிக பலன்களை கொடுக்கக் கூடியது.
சாதாரண சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை உணவாக எடுத்துக் கொள்வது பல நன்மைகளை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சரும பராமரிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. முகம் பளபளப்பாக இருப்பதற்கு வெல்லம் உங்களுக்கு உதவும். அதுமட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும். இதனால் உங்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இதனை எப்படி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.
தேன், எலுமிச்சை, வெல்லம்:
1 தேக்கரண்டி வெல்லம் தூள், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். இதனை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். அதன்பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
பயன்கள்:
தேன் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்.
எலுமிச்சை சருமத்தை தூய்மைப்படுத்த உதவும்.
வெல்லம் வயதான தோற்றம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுகிறது.
தக்காளி, மஞ்சள், வெல்லம்:
1 தேக்கரண்டு வெல்லம் தூள், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். இதனை ஒரு பேஸ்ட் போல் தயாரித்து முகத்தில் தடவிக் கொள்ளவும். இதனை 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர் வைத்து கழுவிக் கொள்ளவும். இதனை வாரத்திற்கு 3- 4 முறை செய்யலாம்.
பயன்கள்:
மஞ்சள் கிருமிநாசினி பண்பைக் கொண்டது.
தக்காளி சாறு முகத்தில் உள்ள வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.
முகப்பருவை தடுப்பதற்கும் வெல்லம் பயன்படுகிறது.
திராட்சை, பிளாக் டீ, வெல்லம்:
1 டீஸ்பூன் திராட்சை சாறு, 1 டீஸ்பூன் குளிர்ந்த பிளாக் டீ, ஒரு சிட்டிகை மஞ்சள், 1 டீஸ்பூன் வெல்லம் தூள், சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு பேஸ்ட் போல் தயாரிக்கவும். முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதனை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
இளம் வயதிலேயே தோல் சுருங்கி வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்க இந்த செயல்முறை உங்களுக்கு உதவும். அதனால் இதனை முயற்சித்து பயன்பெறுங்கள்

Comments
Post a Comment